அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

எமை மறந்ததேன் தாயே

svr.pamini
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளியானவளே
அபிராமப் பட்டரின் கவியானவளே-உனை
மலர் கொண்டு வணங்கினோம் தாயே
எமை மறந்ததேன் தாயே

அலை மேல் அலையும் சருகானோம்
சோதனைகள் எமைச் சுற்றியே
வேதனைகள் நிந்தம் எமை தீண்டியே
வாழ்கிறோம் தாயுமான தாயே
பாதகங்கள் அழிந்திட வேண்டும்
நம் வாழ்வு ஒளிர்ந்திட வேண்டும்
இன்பங்கள் பெருகிட வேண்டும்
மூகாம்பிகை தாயே
உனையன்றி யார் துணை தாயே

கண்ணீரில் கரைகின்றதே நாட்கள்
காலங்கள் சோகமாய் மாறிடுது தாயே
ஆயிரம் விழி கொண்ட தேவி நீ
ஒரு விழியால் எமை பார்த்திடு தாயே
எம் சோகம் அறிவாயோ தாயே
ஆதரித்து அருள் தருவாயா?

எம் சாபங்கள் அகலுமோ?
பாதக இருள் வினை நீங்குமோ?
புண்ணிய தேசமாய் எம் தேசம் மாறுமோ?
உன் மலர்ப்பாதம் சரணடைந்தோம் தாயே
சரணா கதி அளித்திடு தாயே

. © 2011 Template by:
svrpamini