அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

எங்கள் உயிர் உயிர் இல்லையா?


பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம்
அதை செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா?
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ நா வே நீயா?
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா?

காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது
அந்த பிஞ்சின் உயிரையும் கூட குடித்துள்ளது
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா?
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா?
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா?
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

அவலச்சா வேண்டாம் எமக்கு அதுதான் விதி என்றால்
நாட்டைதா எம் உயிரை ஈடுவைத்து
அறியாத பிஞ்சுதான் உனக்கு குறியென்றால்
நீதான் உனக்கு உலகத்தில் பெரும் வீரன்
நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும்
காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் எம் மண் வீழாது

இப் பிஞ்சில் இருந்து கொட்டிய ஒவ்வொரு குருதிச்சொட்டும்
மொட்டாகி மலராகி நாளை உன்னைத்தாக்கும் கணையாகும்
புலத்திலும் எம் நிலத்திலும் இது நிச்சயம் நடக்கும்
காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்
அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து
கொள்
svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini