அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

எழுந்திடு வீரமாய்
தமிழனே வாழ்க்கையின் விழ்ச்சி
நாம் தோற்றிட அல்ல பகைவரின் வெற்றி
நாம் பயந்திட அல்ல
சொத்தின் இழப்பு நாம்
செத்திட அல்ல
சொந்த
த்
தின் இழப்பு சோகமாய்
நாம் வாடிட அல்ல
ஊரவர் வெறுப்பு நாம்
ஒழிந்திட அல்ல
உரிமையின் மறுப்பு
நாம் உறங்கிட அல்ல

தமிழனே எழுந்திடு வீரமாய்
கடலிலும் வேகமாய்
இழந்தது உனை சேரும்
பிரிந்தது இன்று உனை நாடும்
மறந்தவர் கை கோர்ப்பார் தொடர்ந்திடும்
உலகம் என்றும் உன் நிழலை

. © 2011 Template by:
svrpamini