அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

அம்மா கவனம்..


அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும்..
இனி எவரும் இப்படி வாழவேண்டாம் .
இவ்வாறு சாகவேண்டாம்.

உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ
நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை
நினைக்கவே கூடாது!
இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது
நாம் நெருங்க விடவும் கூடாது

அப்பா இல்லை இருக்கிறாரோ தெரியவில்லை
இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக
அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது?
ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது
அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்

அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும்
என் இளையவர் மிகக்கவனம்
இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத
குழந்தைகள் தான் அவர்களுக்கு விருப்பம்
தமிழ் சிசுவின் கொலையும் தான்
வானம் வெறுமையென்று வெளியில் வராதே
நிமிர்ந்தும் நடக்காதே.கண்ட உடன் சுடுவார் கயவர்


மண்தின்று வளரும் மரமாக மாறிவிட்டோம்
இல்லை மாற்றி விட்டார்
நஞ்சற்ற கொடி எல்லாம் உணவு
கசப்பான உணவு கூட அமுது
மலம் கலக்கா நீரெல்லாம் குடிநீர்
மொத்தத்தில் காட்டு மரம் கூட கண்டு
அஞ்சும் காட்டு வாசிகளாக்கிவிட்டார்

அம்மா என் அழுக்கு சட்டை கண்டு கலங்கும்
உன் கண்ணீர் துன்பத்திலும் வற்றாத உன் பாசம்.
சட்டையில் தான் அழுக்கு
இன்னும் என்னில் என் மனத்தில் இல்லை


கயவர்கள் காலடி பட்ட நிலத்திற்கு நீ போகவிரும்பவில்லை
அதில் எனக்கும் விருப்பம் இல்லை
இல்லை என்னும் ஒன்றுக்குள் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்
எதுவும் இங்கில்லை பணம் இல்லை பொருள் இல்லை
மருந்தில்லை உணவில்லை நிம்மதி துளிக்கும் இல்லை

தூங்கவும் விடவில்லை ஒன்று மட்டும் உள்ளது
சுற்றவும் சாவும் அழுகையும் அவலமும்
இது தொடராது தொடர விடவும் மாட்டார் நாம் இதுவரை நம்பியவர்
உலகத்து உறவுகள் எப்போதும் கைவிடார்
அதுவரை உயிரைப்பிடிப்போம் இல்லை
எம் இறப்பில் எழுதப்படட்டும் பிந்திய ஈழத்தின் அத்தியாயம்
. © 2011 Template by:
svrpamini