அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

ஈழம் மலர்ந்ததே தெரிகின்றதா?


சூழுகின்ற பகையை வென்றே
எங்கள் ஈழம் எங்கள் கையில் வந்ததே தெரிகின்றதா?

புலிக்கொடியேற்றி ஆளும் காலம் வந்ததே
கல்லறை வீரர்களின் கனவும் பலித்ததே
அடிமை வாழ்வும் ஒழிந்ததே
அன்னியன் ஆட்சி முடிந்ததே
உலக வரை படத்தில் நம் நாடு
உலகமே பார்க்கும் வீரத்திரு நாடு

வீரம் விளைந்த மண்ணிலே
வீரப்புதல்வர்களின் கீதம்-
வன்னி மண்ணெங்கும் எதிரொலிக்குதே
மங்கயையர் மனமெங்கும் மகிழ்வு பொங்குதே
தம் மானம் காத்திட ஈழம் மலர்ந்ததென்றே-
சொல்லிச்சொல்லி சொல்லுக்குள் அடங்கா-
இன்பங்கள் எங்கும் மழைச்சாரலாய் பொழியுதே

குருதி உறைந்த மண்ணிலே பூக்கள் வாசம் வீசுதே
விடியல் விடிந்ததென்று
புல்லினங்கள் கானம் இசைக்குதே
ஓலை வீட்டிலும் இன்பமே
மாடி வீட்டிலும் இன்பமே
எம் தேசம் மலர்ந்ததென்று சொல்லியே

தேசம் இது எங்கள் ஈழ தேசமே
தேசம் கடந்தாலும் எம் நெஞ்சில்
வாசம் வீசும் ஈழ தேசமே
புலம் பெயர் நாட்டிலே எம் உறவுகள் மனமெங்கும்
புது வித ஆனந்த அலை அடிக்குதே
உலக தமிழர் மனதிலே தமிழனுக்கு ஒர் நாடு கிடைத்தென்று
சொல்லியே வாழ்த்து பா இசைக்கின்றார்களே

குருதிக்குள் நீராடிய ஈழத்தாயின் கண்ணில்
ஆனந்த கண்ணிர் பெருகுதே
வீர மறவர்களின் தியாகம் சரிதிரம் சொல்லுமே
வறுமை நிலை ஒளிந்து
வாழும் வாழ்க்கை ஒளியாய் நாளை மாறிடுமே
அழகிய நாடு எதுவென்றால் ஈழ நாடு என்று
உலகமே சொல்லும் நாள் வந்திடுமே

நான் இதுவரை கண்டது கனவா?
நிஜமாகிடும் நாள் வந்திடுமா?
கண்களிலே கனவு சுமந்து - என்
ஈழத்தாயின் விடியலுக்காக காத்து இருக்கிறேன்

. © 2011 Template by:
svrpamini