அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

உனக்கும் எந்தன் நிலைதான்...


ஈழத்தில் சிங்கள இராணுவம் வந்ததே
கொட்டியது குண்டுகளின் மழை ஈழத்தில்
கொடுத்தாளே கொத்துக்குண்டை சோனியா
அதை அடித்தானே சிங்கள ராணுவம்..
ஈழத்தில் கூடிவாழ்ந்த மக்கள் விழுந்தனர் ஐயா..
பறித்தானே தமிழ் மக்கள் உயிரை பறித்தானே
கொத்தாய் பறித்தான் ஐயா சிங்களவன்
கூடிவாழ்ந்த மக்கள் எங்கே.? உறவுகள் எங்கே.?
நாங்கள் வாழ்ந்த கூறை வீடு எங்கே.?
ஓடியாடிய புல்வெளி எங்கே.?
பட்டம் ஏற்றிய அந்த வயல் வெளி எங்கே.?
போட்டானே சிங்களவன் நெருப்புக் குண்டை
வீடும் எரிந்தது ஐயா புல்வெளியும்
பொசுங்கியது ஐயா..
வயல் வெளியும் தீயில் வாடியது ஐயா..
அங்கு ஓடியாடிய சின்னஞ் சிறு
குழந்தைகளும் தீயில் வெந்தது ஐயா..
இலங்கை முழுவதும் தங்கள் நாடு என்று
சொல்லி அடிச்சானே சிங்களவன்..
அளித்தானே தமிழனை ஈழத்தில்
காலை எடுத்து வச்சானே சிங்களவன்
தொலைந்தது ஐயா எங்கள் நிம்மதி...
நாள் தோறும் தொழுத கோவில் எங்கே.?

கோயில் மீது கோடி குண்டுகள் வந்து விழுந்தது ஐயா
இங்கு லட்ச்சகணக்கான தமிழன் செத்தான் ஐயா..
தெய்வம் எங்கே சென்றது ஐயா..
பிறந்தோம் ஈழத்திலே அடிமையாக
வாழ்கின்றோம் இப்போது இங்கே..
நாள் தோறும் பாடம் படித்த பாடசாலை எங்கே.?
நண்பர்கள் எங்கே.? பாடம் சொல்லித்தந்த குருவும் எங்கே.?
பாடசாலை எல்லாம் சிங்கள ராணுவம் ஐயா..
இந்தியா ராணுவம் வந்தது ஐயா..
சிங்கள ராணுவம் வந்தது ஐயா..
கணவன் மனைவியை பிரித்தான் ஐயா..
தாயும் பிள்ளையும் பிரித்தான் ஐயா..
பெண்கள் கர்ப்பை பறித்தான் ஐயா..
கண்ணகி சாபம் மதுரையை எரித்தது ஐயா..
ஈழ பெண்களின் சாபம் இங்குள்ள
ராணுவத்தை அழிக்காத..?

பாதி தமிழன் ஈழத்தில் செத்தான் ஐயா
பாதி தமிழன் அடிமைகள் ஆனான்
தப்பிய தமிழனின் பாதி தமிழன்
காலை இழந்தான் ஐயா..
கையை இழந்தான் ஐயா..
கண்கள் தோண்டப்பட்டது ஐயா..
யுத்தம் முடிஞ்சது என்று சொன்னான் ஐயா..
எங்களை இன்னும் அடிமைகளாக வைத்து
கொடுமை படுத்துறான் ஐயா.

என் காலோ இல்லை என்னை
கொண்டு போய் அடிக்கிறான் ஐயா..
என் வாய் மட்டும் தான் பாடுது
ஐயா பட்ட காயம் இன்னும் ஆறவும் இல்லை
பட்ட துன்பம் இன்னும் தீரவும் இல்லை .
தமிழா நீ புறப்படு போராட இல்லையேல்
உனக்கும் எந்தன் நிலை தான் தமிழா..
svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini