அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

ஈழவனின் காதல்.!

பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து
விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை

உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன,
நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது!

முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும்
பிராகச மின்னலை உதிரும் விழிகளும்
தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்!!
உன அழகை என்னவென்று சொல்வேன்!!
அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை
நடமாடும் அகராதி நூல் நீமட்டும் தான் பெண்ணே

உள்ளத்தில் ஒரு வகை காச்சல்
அதனுடன் என்னால் போராடமுடியவில்லை எதிர் நீச்சல்
உன்னை தேடியே விழியின் மேச்சல்
அதை சொல்லத் தயங்குகின்றேன் என் பேச்சில்
உனக்கதை புரியவைக்கத்தான் இந்த அலைச்சல்!

வயது வந்து மேடையிட்டு ஆடுதா கூத்து
இல்லை மாயை என்னை வீழ்த்த வரும் வலையா?
உன் பேச்சில் மயங்கும் மனதை கட்டிவைக்க முயல்கிறேன்
உன்னை கண்டவுடன் கண்மூடி திரும்பினால்
மனத்திரையில் புன்னகைத்து ஏளனம் செய்கிறாய்
பட்டு உடுத்தி கொஞ்சும் தமிழ் பேசி உருகிறாய்
பிஞ்சு மனம் எனதை ஏன் மருகிறாய்?

பூமியில் நான் மனிதனய் பிறந்தது தவறா?
அல்லது அந்த ஆண்டவன் தவறா?
முடிவின்றி தொடர்கின்றது என் ஆராய்சி
ஆனாலும் தவறுகள் வர்க்கத்தில் விரிகின்றது

அதிகார முள்ளில் கரைந்தோடும் நாட்கள் கண்டு
என் இதயம் கொதிக்கின்றது
அதனால் விழியாலே பேசும் வித்தக பதுமையே
உன்னை பொறுமைக்குள் திணிக்கும் காலம் இது

பரந்து விரியும் உன் ஆசையை தூக்கில் இடு!
அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை சிறையில் இடு!
என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு!

பிறவி கடமைக்கு நான் புறப்படும் காலம் இது
எம் நிலத்தில் எதிரியின் எச்சங்கள் எக்காளம் இட்டு
எம் நிலத்தை சூறையாடி நாசம் செய்து வருகின்றான்
அந்த நரிகளை கண்ட துண்டமாய் கருவாடு ஆக்கி
தாய் நிலத்தை காத்து உன்னை கரம் பிடிக்க வருவே
ன்

svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini