
ஈழவர் மனங்களில் உறையும் தெய்வங்கள்
நீங்கா இடம் பிடித்த நிய மானிடர்கள்
மலைபோல் குவியுது மாலை அதை
வாங்கிட நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு நீங்கவில்லை
நீங்கப்போவதும் இல்லை
எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்
விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்
தமிழீழ தாகத்தினை தீர்த்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்
மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்
வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்
பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்
மறையாது உங்கள் செயல்
தோட்டாக்கள் துளைத்து உம் உயிர்மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்
அழியாது தியாகம் மறையாது
ஈழவர் நாம் உம்மை புதைக்கவும் இல்லை
மண்ணில் எரிக்கவும் இல்லை
எம் மனதில் விதைத்து விட்டு காத்திருக்கின்றோம்
நீர் முழைக்க பெரு விருட்சமாய் தளைக்க
கனல் மீது நீங்கள் நடந்ததை பார்த்துதான்
எம் உடலில் உரமேற உயிரில் வீரம் கலந்தது
நீங்கள் விட்ட இறுதி மூச்சுள்ள காற்று பட்ட
எங்கள் தேகம் சிலிர்க்க
நீங்கள் வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்
உங்கள் வேட்கையை அடைக்க