
என் ஈழத்தோழனே
நீ கோசமாய் ஆணையிடு
இமையே படுத்து பாறையாகும்
துணிவுடன் நீ நடக்க துள்ளும் அலைகளும்
உன் காலில் தலை குனியும்
சதியால் இழந்த மண்ணை
சரித்திரம் தேடித்தராது
புதிய சரித்திரம் நீ படைக்க
புறப்படு என் ஈழத்தோழா
வரும் நாள் உனக்கு
திரு நாள் ஆகும் தோழா
அடை மொழி அனைத்தும் அகன்றிட
புது ஒளி நாளும் வந்திட
துன்பங்கள் தொலைவாக தொலைந்திட
நாளை பிறந்திடும் தமிழரின் தாயகம்
புறப்படு என் ஈழத்தோழா
புதிய சரித்திரம் நீ படைக்க
புறப்படு என் ஈழத்தோழா...